யாழில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய இரு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்

வடமராட்சி, கரணவாய் மற்றும் வதிரி பகுதியில் அரசின் கட்டளையை மீறி இயங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் மறு அறிவித்தல்வரை முத்திரையிடப்பட்டு மூடப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட கோவிட் -19 உயர்மட்டக் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
எனினும் கரணவாய் மற்றும் வதிரி ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்கள் இரண்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை தொடர்பில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையிலேயே அந்தக் கல்வி நிலையங்களுக்கு நெல்லியடி பொதுச் சுகாதார பரிசோதகரால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply