பெங்கமுவே நாலக்க தேரர் கூறியது போன்று கஞ்சா செய்கையை சட்ட ரீதியாக்க நடவடிக்கை!

பெங்கமுவே நாலக்க தேரரின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் கஞ்சா செய்கையை சட்டரீதியாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக உள்நாட்டு வைத்தியம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.  “பெங்கமுவே நாலக்க தேரர் இந்த நாட்டை அதிகம் நேசிக்கிறார். கடந்த காலங்களில் சுதந்திர தேசிய போராட்டத்தை தொடங்கிய பிக்கு  ஆவார். அதனால் தேரரின் ஆலோசனையை ஏற்று அதனை நாட்டுக்குள் நடைமுறைபடுத்த நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். 

எமது முதல் திட்டம் ஆயுர்வேத மருத்துவத்தில் எமக்கு தேவையான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாகும். அதற்கென 1000 ஆயுர்வேத கிராமங்கள் திட்டத்தை செயற்படுத்த உள்ளோம். நாட்டு மக்களுக்கு வருமானம் பெறும் வகையில் திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

Be the first to comment

Leave a Reply