இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா? – சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம்

இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஈ.எம்.எஸ்.சி மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், சுமத்ரா தீவிற்கு அருகே ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளது.

அத்தோடு கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply