அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்ற இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் மாணவர் விடுதியில் சுமார் 250 படுக்கைகளைக் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக இன்று (12) முதல் செயற்படவுள்ளதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள இராணூவ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாட்டில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, இதற்கான தனிமைப்படுத்தல் முகாம்களை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கல்லூரியின் பயிற்சி ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதனையடுத்து இதனை, சுத்தம் செய்யும் நடவடிக்கையிலும், தொற்று நீக்கம் செய்யும் பணியிலும் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியை, கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவது தொடர்பிலும், இம்முகாமின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சுகாதாரச் செயற்பாடுகள் தொடர்பிலும் கல்விக் கல்லூரி நிருவாகம், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிக்கப்படுகின்றது.

இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரியின் நாலாபுறங்களிலுமுள்ள எல்லைகளில் பொது மக்களின் வசிப்பிடங்கள் காணப்படுவதால், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் இங்கு அமைவது தொடர்பில் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply