அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய மின்சாரசபை ஊழியர்கள்: மூடப்பட்ட அலுவலகம்

இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்தின் கந்தான கிளையின் 12 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி ககப்பட்டுள்ளதாக ஜா-எல பொதுச் சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கம்பஹா மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் குறித்த கந்தானை அலுவலகத்தின் பணியாளர் ஒருவரின் மகள் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் பொதுச் சுகாதார ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மின்சார சபையில் பணிபுரிந்த ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ள தாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply