புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசின் விசேட அறிவிப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வு பெற்ற) பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இடம் போதாமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதுவரை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு வர விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கைக்குப் பல திட்டமிடப்பட்ட விமானங்களின் விமான அட்டவணையைத் திருத்தி எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply