துப்பாக்கி மற்றும் போதைப்பொருள்களுடன் ஐவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர12 ரக துப்பாக்கி ஐந்துடன் சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – திருக்கோயில் பகுதியில் வைத்து நேற்று இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் திருக்கோயில் பகுதியில் வசித்து வரும் 22 தொடக்கம் 66 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மொரகஹகந்த – தலகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 26 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மற்றுமொரு சந்தேக நபர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாதுக்க பகுதியில் உந்துருளி மூலம் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நாராஹென்பிட்டியவைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply