கொரோனா தொற்றாளர் சென்ற இரு உணவகங்கள் மூடல்!

பொரள்ளையில் அமைந்துள்ள இரண்டு உணவகங்களை மூடுவதற்கு தீர்மானத்துள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இருவர்கள் குறித்த உணவகத்தில் உணவினைப் பெற்றுக் கொண்டுள்ளமையினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றாளர்கள் பொரள்ளையிலுள்ள குறித்த இரு உணவகத்திற்குச் சென்றமையால் அங்கு தொழில்புரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply