யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதான வீதியின் கடற்கரை சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கலாசாலை வீதி திருநெல்வேலி பகுதியினை சேர்ந்த செல்லர் சிவனேசலிங்கம் (வயது 60) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார் .

கடந்த 22ம் திகதி மேற்படி முதியவர் தனது மகனுடன் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த முதியவர் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது,.

Be the first to comment

Leave a Reply