“அவரை பற்றி பேச முடியாது”.. ரிஷப் பண்ட் பெயரை கேட்டதும் பதறிய ஷ்ரேயாஸ்.. அதிரடி நீக்கம்.. என்ன ஆனது?

துபாய்: நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட் கலந்து கொள்ளாதது குறித்து அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். 2020 ஐபிஎல் தொடரின் இரண்டு டாப் அணிகளாக டெல்லி மற்றும் மும்பை அணிகள் பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் இந்த சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி கடைசியில் வெற்றிபெற்றது

நேற்று மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் ஆட வில்லை. ரிஷப் பண்ட் டெல்லி அணியின் மிக முக்கியமான வீரர் ஆவார். ஆனால் அவர் நேற்று பேட்டிங் இறங்கவில்லை. மாறாக அவருக்கு பதிலாக ரஹானே பேட்டிங் இறங்கினார்

ரஹானேவை அணியில் எடுத்த போதே அது குறித்த விளக்கத்தை டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்துவிட்டார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஆடவில்லை.. ரஹானே அணிக்குள் வருகிறார் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துவிட்டார். நேற்று போட்டியில் ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால் டெல்லியின் பேட்டிங் சொதப்பியது

மிடில் ஆர்டர் முக்கியமாக மிடில் ஆர்டர் மோசமாக சொதப்பியதில் டெல்லி தோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கடும் கோபத்தில் இருந்தார். அணி தோல்வி அடைந்த விரக்தியில் இருந்தவரிடம் ரிஷப் பண்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஏனோ ரிஷப் பண்ட் பெயரை கேட்டதும் ஷ்ரேயாஸ் பதற்றம் அடைந்தார். அவர் மீண்டும் ஆட வருவாரா என்பது போல பதற்றம் அடைந்தார்.

அதன்பின் பேசிய ஷ்ரேயாஸ் ரிஷப் பண்ட் மோசமாக காயம் அடைந்துள்ளார். கடந்த போட்டியில் அவர் காயம் அடைந்தார். அதனால் இந்த போட்டியில் ஆடவில்லை. இனி வரும் போட்டியில் அவர் எப்போது ஆடுவார் என்று தெரியாது. அவர் பற்றி இப்போது பேச முடியாது

அவரை பற்றி என்னால் கருத்து கூற முடியாது. மருத்துவர்கள் அவரை சோதனை செய்து வருகிறார்கள். ஒன்றிரண்டு வாரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவரை பற்றி நான் எதுவும் இப்போது சொல்ல முடியாது என்று பதற்றமாக பேசினார்.

நேற்று ரிஷப் பண்ட் பேசிய போது ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் பதற்றமாக காணப்பட்டார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் அச்சத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் இல்லையென்றால் டெல்லி அணி பெரிய அளவில் பாதிக்கப்படும். டெல்லி அணியின் மிடில் ஆர்டர் மோசமாக சொதப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply