இலங்கையில் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று!

மாவனெல்ல பிரதேச வைத்தியர்கள் இருவருக்கும் கேகாலை பிரதேச வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர்கள் மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு தொடர்புடைய முதலாவது நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அத்தனகல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடைய எழுவாப்பிட்டிய பிரதேச விகாரையின் பௌத்த துறவிகள் நான்கு பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

விகாரையிலுள்ள மேலும் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be the first to comment

Leave a Reply