கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி? அமைச்சர் நாமல் வெளியிட்ட தகவல்

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொவிட் -19 வைரசை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்காக பொது மக்கள் சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கொவிட் 19 நெருக்கடி நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டம் தயாராக வேண்டிய முறை பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.

Be the first to comment

Leave a Reply