வவுனியாவில் பெண் ஒருவரின் அத்தரங்க உறுப்பில் இருந்து வெளிவந்த துணி, சத்திர சிகிச்சையில் தவறா?

வவுனியாவில் பெண் ஒருவரின் அத்தரங்க உறுப்பில் இருந்து சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி மீட்கப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா வைத்தியசாலையில் இன்று (12.10) கு ழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் ஒருவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் வவுனியா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் வீட்டில் மலம் கழிக்கும் போது பெண்ணுறுப்பின் ஊடாக கடந்த சனிக்கிழமை துணி ஒன்று வந்துள்ளது. மீண்டும் நேற்று (11.10) ஞாயிற்றுக் கிழமையும் துணி வந்துள்ளது.

இவ்வாறு சுமார் 50 சென்ரி மீற்றர் நீளமான துணி வந்துள்ளது.

இதனையடுத்து தனியார் வைத்தியசாலைக்கு சென்ற குறித்த பெண் அவ் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

Be the first to comment

Leave a Reply