வட கொரியாவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை.! வட கொரியா அதிபர் பெருமிதம்

எம் நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றியிருக்கின்றோம் என்ற உண்மை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ;

கொரோனா வைரஸ் தொற்றில் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்பெருந்தொற்றில் இருந்து எம்முடைய மக்கள் அனைவரையும் காபிற்றியிருக்கின்றோம்.

இந்த வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆரோக்கிய தோற்றத்தினை பார்க்கும் போது நன்றி கூறுவதை தவிர என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.

வடகொரியா மக்கள் அவர்களாகவே மிகப்பெரிய வெற்றியை சாதித்து இருக்கின்றார்கள். 

வடகொரியாவின் அண்டைய நாடான சீனாவின் வுகாண் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் பின் முழு உலகையும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகள் இல்லை என்பது பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply