மாதகல் கடற்பரப்பில் 116 கிலோ கஞ்சா மீட்பு:

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 116 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டள்ளது.

மாதகல் கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது, டிங்கு படலில் அநாதரவாக 6 பொதிகள் இருந்துள்ளன.

அவற்றை மீட்ட கடற்படையினால், தேடுதல் நடாத்திய போது, எவரையும்கைது செய்யாத நிலையில், கஞ்சா பொதிகளை இளவாளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கஞ்சா பொதிகளை மல்லாகம் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை இளவாளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Be the first to comment

Leave a Reply