மன்னார் மாவட்ட உயர்தர மாணவர்களின் நலன் கருதி கிருமி தொற்று நீக்கி மற்றும் முகக்கவசங்கள் மெசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைப்பு.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இன்றைய தினம் திங்கட்கிழமை(12) காலை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களின் சுகாதார நலன் கருதி அவர்களுக்கான ஒரு தொகுதி கிருமி தொற்று நீக்கி மற்றும் முககவசங்களை  மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.-மன்னார் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் உயர்தர பரீட்சைகள் ஆரம்பித்து இடம் பெற்று வருகின்ற நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த முக கவசங்கள் கிருமி தொற்று நீக்கும் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) குழு தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் திரு.திலீபன் ஆகியோரிடம் குறித்த கிருமி தொற்று நீக்கிகள் மற்றும் முககவசங்களை கையளித்துள்ளனர்.குறித்த சுகாதார பொருட்கள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு மற்றும் மன்னார் வலய கல்வி பணிமனைகளுக்கு மாவட்ட செயலகத்தினூடாக கையளிக்கப்பட்டு பின்னர் உயர்தர பரீட்சைகள் இடம் பெறும் நிலையங்களுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply