மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறையில் க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெற்றது!!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு , கல்குடா மற்றும் மட்டக்களப்பு கல்வி  வலயங்களில் கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய அமைதியான முறையில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 பரீட்சை நிலையங்களில் 10,1 98 பரீட்சார்த்திகள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதில் புதிய பாடவிதானங்களில் 8218 பழைய பாடவிதானங்களில் 1980 பரீட்சார்த்திகளும் அடங்குவதாகவும் 14 பரீட்சை இணைப்பு நிலையங்கள் வினாத்தாள் விநியோகம் மற்றும் சேகரிப்பு பணிகளில் செயல்படவுள்ளது.
இப்பரீட்சை நடைபெறும் பாடசாலைகள் தொற்று நீக்கி விசிறப்பட்டும் மேலதிக சுத்தம் செய்தும் பரீட்சைகள் இடம்பெற்றன. பரீட்சார்த்திகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சுகாதார முறைப்படி கால்கள் தொற்று நீக்கியால் கழுவிக்கப்பட்டு பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Be the first to comment

Leave a Reply