கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை பகுதியில், கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி- ஆழியவளை பகுதியில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய பளை நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் குலரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர், கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 10.765கிலோ கிராம் கேரள கஞ்சாவும், 14.500ரூபாய் பணமும் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், அவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply