உதயமாகுமா ஐக்கிய கூட்டணி? விரைவில் சஜித்-ரணில் அணி சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலருக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐ.தே.கவின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ருவான் விஜேவர்தனவுக்கு தொலைபேசி ஊடாக சஜித் வாழ்த்து தெரிவித்தபோது, நேரடி சந்திப்புக்கான அழைப்பை ருவான் விடுத்திருந்தார் எனவும், இதன்பிரகாரமே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதற்கான சிறப்பு பிரதிநிதியாக திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply