99 போதைப்பொருள் பைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்த முயன்ற இளைஞருக்கு நடந்த கதி.!

பிரித்தானிய விமான நிலையத்தில் 99  போதைப்பொருள் பைக்கட்டுகளை விழுங்கி வயிற்றில் வைத்து கடத்த முயன்ற 22 வயது இளைஞர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

பிரேசிலின் sao paolo சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 5 ஆம் திகதி பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். இதனையடுத்து அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் அவர் பிரித்தானியாவிற்கு வருவது எனது கனவு எனவும் சுமார் ஒரு மாத காலமாக லண்டனில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் மார்ச் மாதத்தில் தனக்கான டிக்கெட்டை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் டிக்கெட்டை  பரிசோதனை செய்த போது மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அவர் டிக்கெட் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் x – ray சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர்.அதில் குறித்த இளைஞர் 99 A ரக போதைப்பொருள் பைகளை விழுங்கியிருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply