உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற தீவிர நடவடிக்கை!

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனைத்து உயர்தரப் பரீட்சை நிலையங்களும் மாணவர்கள் நலன் கருதி கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாத் தொற்று, மற்றும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக பாடசாலை வளாகங்கள், பாடசாலை பரீட்சை மண்டபங்களுக்கு புகை விசிறல், கிருமி தொற்று நீக்கி விசிறல்என்பன தீவிரமாக செயற்படுத்தப்பட்டது.

குறித்த நடவடிக்கை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில் இடம் பெற்றது. சுகாதார நடை முறைகளை பின்பற்றி பரீட்சை மண்டபத்தினுள் நுழையவும் பரீட்சார்த்திகளுக்கு விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையக்களுக்கு சமூகமளிக்குமாறும் சமூக இடைவெளி பேணல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட விடயங்களை பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரி வைத்தியர் அலுவலகம் கேட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply