நாங்கள் சாதித்து விட்டோம் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பெருமிதம்

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் மக்கள் இருப்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலகம் முழுவதற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் இப்பெருந்தொற்றில் இருந்து எம்முடைய மக்கள் அனைவரையும் காப்பாற்றியிருக்கிறோம்.

Be the first to comment

Leave a Reply