சுற்றுலா பேருந்தை மோதிய புகையிரதம் – கோர விபத்தில் பறிபோன 17 உயிர்கள்

தாய்லாந்தில் புகையிரத கடவை ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் காலையில் 65 பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பேருந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் கனமழை காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் இரண்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply