தம்புள்ள பொருளாதார மையத்தில் கொரோனா அபாயம் – பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

தம்புள்ள பொருளாதார மையத்திற்குச் சென்றுவந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

திவுலபிட்டிய – படபொல பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பி.சி.ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருடன் கதிர்காமத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகவும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அண்மைய நாட்களில் அங்கு சென்றுவந்தவர்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply