பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு உறுதியானது கொரோனா தொற்று!

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

களனி பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மினுவங்கொட பகுதியை சேர்ந்தவர் எனவும், தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply