அனலைதீவில் ஆபத்து – பரிசோதனை முடிவு வரும் வரை 39 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் அனலைதீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட போது ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், நீதவானின் அனுமதியுடன் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், அனலைதீவு பகுதியில் குறித்த மூன்று நபர்களும் நடமாடியதாக கருதப்படும் இடங்களில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply