மரண தண்டனை தொடர்பான இலங்கையின் தீர்மானத்திற்கு ஜெர்மன் பாராட்டு

மரண தண்டனை தொடர்பான தடை குறித்து ஜெர்மன் இலங்கையை பாராட்டியுள்ளது.

இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஹோல்கர் சீபர்ட் ட்வீட் செய்துள்ளார்

1976 முதல் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து இலங்கை பாராட்டப்பட வேண்டும் என இலங்கைக்கான ஜெர்மன் தூதர் ஹொல்கர் சீபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டுகளில் உலகெங்கிலும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை கட்டுப்படுத்துவதுடன், சில நாடுகள் ரத்து செய்துள்ளன.

60 க்கும் குறைவான நாடுகள் மரண தண்டனையை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. அவற்றில் ஜெர்மனியின் நெருங்கிய பங்காளிகளான ஜப்பான் மற்றும் அமெரிக்கா அடங்கும்.

ஐரோப்பாவில், மரண தண்டனையைப் பயன்படுத்தும் ஒரே நாடு பெலாரஸ் தான்.

கடந்த ஆண்டு அதிகளவாக சீனாவில் 650 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளும் ஈரானில் 250 க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளும் விதிக்கப்பட்டன.

மரண தண்டனையை ஒழிப்பதற்கான முயற்சிகளை ஆதரிப்பது ஜெர்மனிய மனித உரிமைக் கொள்கையின் முன்னுரிமையாகும்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டணியுடன் சேர்ந்து, ஜெர்மனி பல ஆண்டுகளாக மரண தண்டனைக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply