மேலும் மூன்று இடங்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் உற்படுத்தப்படுகிறது!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாலிக்கா தென, எலுவாபிட்டிய மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

அதற்கமைய குறித்த மூன்று கிராம சேவகர் பிரிவிற்கு உப்பட்டவர்கள் 7 ஆவது கிராம சேவகர் பிரிவிற்கு உட்பிரவேசிக்கவோ வெளிச்செல்லவோ முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரி வித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்ட நபரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அத்துடன், குறித்த வைத்தியசாலையில் 7 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply