மட்டக்களப்பு மாநகர முகப்பு வாயில், சிறுவர்களுக்கான சாகச பூங்கா வடிவமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பின் தனித்துவமான அடையாளங்களை முன்னிறுத்தி மாநகர முகப்பு வாயில் அமைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான சாகச பூங்காவினை வடிவமைத்தல் தொடர்பிலான கலந்துரையாடலானது இன்று (11) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர் நேய கட்டமைப்பின் ஊடாக சிறுவர்களின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கிலும் உல்லாசப் பிரயாணிகளை கவரும் விதத்திலுமாக ஓர் சாகச பூங்காவினை அமைப்பது தொடர்பில் மேற்படி கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அத்துடன் செர்றி (CERI) நிறுவனத்தின் துணையுடன் மட்டக்களப்பின் தனித்துவமான பாரம்பரிய கலாசார விழுமியங்களை முன்னிறுத்தி சத்துருகொண்டான் – தண்ணாமுனை எல்லையில் அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் முகப்பு வாயில் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேற்படிக் கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்களான துரைசிங்கம் மதன், க.ரகுநாதன், யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.அன்ருவ், செர்றி (CERI) நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் வி.தர்சன், செயற்திட்ட உத்தியோகத்தர் பவீணா மோனராஜா மற்றும் நிர்மாணப் பொறியியல் வடிவமைப்பாளர் வீ.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply