கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படும் – வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் அலை இரண்டு இனங்காணப்பட்டுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு இராணுவத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்புடன் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலே அவர்கள் தங்குவதற்கான தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply