கொரோனாவுக்கு தடுப்பு மருந்து -அமெரிக்கா வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

”கொரோனா தடுப்பூசி மருந்து வினியோகம், அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்,” என, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலர் ரொபேர்ட் கேட்லெக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலர் ரொபேர்ட் கேட்லெக் தெரிவிக்கையில்

கொரோனா தடுப்பூசி மருந்தை, பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், ஒரு தடுப்பூசி மருந்திற்கான அங்கீகாரம் கிடைத்து விடும் என, எதிர்பார்க்கிறோம்.

இதைத் தொடர்ந்து, 2021 ஜனவரி முதல், தடுப்பூசி மருந்தின் வினியோகம் தொடங்கும். அதிபர் டிரம்ப், முடிந்தவரை விரைவாக, தடுப்பூசி வினியோகிக்கப்பட வேண்டும் என, விரும்புகிறார். அதனால், ஜனவரிக்கு முன்னதாக, தடுப்பூசி வினியோகம் தொடங்கினாலும், ஆச்சரியப் படுவதற்கில்லை என அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply