உயர்தர பரீட்சைக்காக மேற்கொள்ளப்படுகின்ற தீவிர நடவடிக்கை.!

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனைத்து உயர்தர பரீட்சை நிலையங்களிலும் மாணவர்கள் நலன் கருதி இன்று கிருமி தொற்று நீக்கும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று மற்றும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் நோக்கில்  தொடர்ச்சியாக பாடசாலை வளாகங்கள், பாடசாலை பரீட்சை மண்டபங்களுக்கு புகைவிசிறல்,கிருமி தொற்று நீக்கி விசிறல் என்பன தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எ.எம்.எம் அஜித் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பரீட்சை மண்டபத்தில் நுழையவும்  பரீட்சத்திகளுக்கு விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறும் சமூக இடைவெளிகளை பேணுதல் கைகளை நன்றாக கழுவுதல் உள்ளிட்ட விடயங்களை பின்பற்றுமாறும் சுகாதார வைத்தியர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply