கொரோனா தொற்றுக்குள்ளான 119 பேரை தேடுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரை இன்று பகல் வரை தேடிக்கொண்டிருந்ததாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்களைத் தேடுவதில் பாதுகாப்பு தரப்புடன் இணைந்து செயற்படுவதாக மாவட்ட செயலாளர் கூறினார்.

COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் வழங்கிய முகவரிகள் தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் இன்று வரை 5357 பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இன்று 1170 பெறுபேறுகள் கிடைக்கவுள்ளதாகவும் சுனில் ஜயலத் கூறினார்.

தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்ட 970 பரிசோதனை அறிக்கைகள் தம்மிடம் உள்ளதாகக் கூறிய அவர், தொற்றுக்குள்ளான 119 பேரை கண்டறிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply