யாழ் கோண்டாவிலைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா!

வெளிநாடு ஒன்றிலிருந்து திரும்பிய நிலையில் கொரோனா என்று அடையாளம் காணப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் நலமின்மை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவத்துக்காக சென்றிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் உயர் மட்டத் தகவல்களின் படி கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்,

15 நாட்கள் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தப்படவேண்டும் என்பது நடைமுறை. அந்தக் காலப்பகுதியிலேயே அவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் உயர்மட்டத் தகவலின் படி, அவருக்குரிய சிகிச்சைக் காலம் மற்றும் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னரேயே அவர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை,

இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்த முடிவுக்காக மத்திய சுகாதார அமைச்சிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை தொற்று வந்து குணமடைந்த பின்னர் உடலில் குறைந்த கிருமிகள் தொற்று அறிகுறியைக் காட்டுகின்ற சாத்தியம் உள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

Be the first to comment

Leave a Reply