சதித்திட்டங்களின் பின்னணியில் நாமல் குமார – பகிரங்கப்படுத்திய பூஜித் ஜயசுந்தர

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பல அதிகாரிகளை கொலை செய்ய, கூலிக்கு அமர்த்தப்பட்டவரே நாமல் குமார என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும் ஆணைக்குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தவாறு சாட்சியமளித்த பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு,

விஷேட சலுகைகளுடன் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய நாமல் குமார போன்றோர், சலுகைகளுடன் ஆளுநர்களாக கடமையாற்றியவர்கள், ஆலோசகர்களாக இருந்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக் குழுவில் விடயங்களை வெளிப்படுத்த தயராக உள்ளேன்.

நாமல் குமார கண்டி சம்பவத்தின் போது ஒரு உளவாளியாக தொடர்புபட்டார். அவர் அப்போது வழங்கிய தகவல்களுக்காக 5 இலட்சம் ரூபா அவருக்கு பொலிஸ் அறக்கட்டளையிலிருந்து பரிசும் அளிக்கப்பட்டது.

நாமல் குமாரவின் விடயங்களின் பின்னால் இருந்தவர்கள் மற்றும் தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டல் குண்டுதாரி ஜமீல் குண்டை வெடிக்கச் செய்ய முன்னர், சந்தித்த உளவுத்துறை அதிகாரி தொடர்பிலும் விசாரிக்குமாறு இந்த ஆணைக் குழுவிடம் நான் கோருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply