புலனாய்வுத்துறையினர் வெளியிட்ட தகவல்! ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் தனியார் துறையினரின் தலையீட்டினை தவிர்த்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை தனியார் துறையினரின் பங்களிப்புடன் அழைத்துவரும் நடவடிக்கைகளின் போது பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே அழைத்துவரவேண்டும். எனினும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன என புலனாய்வு துறையினர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களையே அழைத்து வரவேண்டும் என்ற விதிமுறை காணப்படுகின்ற போதிலும் அந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Be the first to comment

Leave a Reply