ஆமிர்கானின் லால் சிங் சத்தாவை அடுத்து.. மற்றொரு இந்திப் படத்தில் விஜய் சேதுபதி.. ஜனவரியில் ஷூட்டிங்

சென்னை: தமிழில் இருந்து இந்தியில் ரீமேக்காகும் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் ஹீரோயின். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம், இந்தியில் ரீமேக் ஆகிறது. அவர் ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்து இருந்தனர்.

2017-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகு அவர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானது. கைதி படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. அஜய்தேவ்கன், கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இவர் புலி, இருமுகன், சாமி ஸ்கொயர் படங்களை தயாரித்த மலையாளத் தயாரிப்பாளர். ஒரு ஹீரோவாக விக்ராந்த் மாசே நடிக்கிறார்.

ஜனவரி 10 ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆமிர்கான் நடிக்கும் லால்சிங் சத்தா என்ற இந்தி படத்தில் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். இந்நிலையில் இந்த இந்திப் படத்திலும் அவர் நடிக்கிறார்.

Be the first to comment

Leave a Reply