“டைம் வேஸ்ட்..” ஜோ பிடனுடனான 2வது விவாதத்தில் பங்கேற்க ட்ரம்ப் மறுப்பு.. நிகழ்ச்சி ரத்து

வாஷிங்டன்: ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடனான 2வது விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவாதம் நேர விரையம் என்று இதற்கு ஒரு ‘சாக்கும்’ சொல்லியுள்ளார் ட்ரம்ப்.

ஜோ பிடன் மற்றும் ட்ரம்ப் இடையே, அக்டோபர் 15ம் தேதி மியாமியில் வைத்து, வாத நிகழ்ச்சி நடத்த, ‘அதிபர் விவாதத்திற்கான கமிஷன்’ ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், “ஆரோக்கியத்தை காக்கவும், பங்கேற்போரின் பாதுகாப்புக்காகவும், இந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது” என்று, கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான், கொரோனா பரவலை தடுக்க, இந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்தனைக்கும் இந்த விவாதம் மெய்நிகர் முறையில் நடைபெறுவதாக இருந்தது. அதாவது வீடியோ வாயிலாக ட்ரம்ப் மற்றும் பிடன் விவாதிப்பதாக இருந்தது. இதன்பிறகு, டெனிசீ நாஷ்வில்லில் அக்டோபர் 22ம் தேதி ஒரு விவாதம் நடைபெற உள்ளது.

இதனிடையே, ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு தொலைபேசி வாயிலாக, பேட்டியளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், நான், இந்த விவாதத்தில் பங்கேற்று, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். விவாதம் என்பது இப்படியானதாக இருப்பது கிடையாது என்று அவர் கூறியுள்ளார். நேருக்கு நேர் விவாதம் நடைபெறாது என்பதை காரணம் காட்டி ட்ரம்ப் இவ்வாறு விவாதத்தை தட்டிக் கழிப்பதாக கூறியுள்ளார்.

இப்படி தனித்தனி இடங்களில் இருந்து அதிபர் தேர்தலுக்கான விவாத நிகழ்ச்சி நடப்பது இது முதல் முறை இல்லை. 1960ம் ஆண்டு, ஜான் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகிய அதிபர் வேட்பாளர்கள் இடையே, தனித்தனி இடங்களில் இருந்தபடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. கென்னடி நியூயார்க் சிட்டியிலிருந்தபடியும், நிக்சன் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்தபடியும் வாதம் செய்தனர்.

Be the first to comment

Leave a Reply