பதற்றமடைய வேண்டாம்! கொரோனா கொத்தணி குறைவடைகிறது – சுதத் சமரவீர தகவல்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள்பதற்றமடைய தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் நோய்த் தொற்றாளிகள் கொத்தணி தற்பொழுது குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியசாலை முறையில் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர் எனவும் சமூகத் தொற்றாக மாறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளிகள் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதனால் மக்கள் இது குறித்து பீதியடைந்துள்ளதாகவும் எவ்வாறெனினும், நோய் தொற்று சமூகத்திற்கு பரவுவதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply