லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா.!

கொழும்பு – பொறளையில் அமைந்துள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் 10 மாதக் குழந்தைக்கும், மற்றுமொரு குழந்தையின் தந்தைக்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருந்தமை நேற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வார்ட்டு அறையில் பணியாற்றிய பணிக்குழாமிலுள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதில் மேற்படி பணியாளருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மாநகர சபையில் தொழில்புரியும் 414 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் ,அதில் எவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply