மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 7,000 பொலிஸார் பணியில்!

க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 7,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்குநேர அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கான அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம்தரப்புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

இவற்றை உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துவது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply