நம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில் உள்ளது.

இலங்கை இராணுவம் 71 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் தியாகபூர்வமானதும் வெற்றிகரமானதுமான பங்களிப்பானது – புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாதது!

பல்வகைப்பட்ட அச்சுறுத்தல்கள்,நெருக்கடிகள் மற்றும் அழிவுகளிலிருந்து – எமது தாய்நாட்டைப் பாதுகாக்கும் காவல் அணை அரனாக – நமது தரைப்படை தொடர்ந்தும் ஆற்றி வரும் உன்னத பணி நிகரற்றது!

தனது நெடிய வரலாற்றின் இன்றைய காலகட்டத்தில் – கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் எமது இராணுவத்தின் வீரர்கள் வழங்கிவரும் அதியுயர் சேவையானது – மதிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரியது!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் என்பவற்றில் மட்டுமன்றி – நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் எமது இராணுவம் அளித்து வரும் மேலான பங்களிப்பினை – இந்த தருணத்தில் நான் நன்றியுடன் நெஞ்சில் இருத்தி –

எமது இராணுவத்தின் ஒரு படை வீரனாக நானும் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தேன் என்ற பெருமிதத்துடன் –

இன்றைய நாளில் – இலங்கை இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவிற்கு, எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் மரியாதையையும் அர்ப்பணிக்கின்றேன்!

Be the first to comment

Leave a Reply