கடலரிப்பால் ஜனாஸாக்கள் வெளிவருகிறது : மண் மூட்டைகளை அடுக்கி தொடர்ந்தும் மையவாடியை காக்கும் மாளிகைக்காட்டு மக்கள்- கடலரிப்புக்கு தொடர்ந்தும் இரையாகும் சுற்று மதில்கள்.

மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து தொடர்ந்தும் உடைந்து வரும் அபாயகரமான நிலை தோற்றம் பெற்றுள்ளது. இதன்காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோன்டப்படக்கூடிய வாய்ப்புள்ளதாலும் அந் நூர் ஜும்மாப் பள்ளிவாசலின் தலையீட்டினால் அதற்கான தற்காலிய தீர்வொன்றை பெரும் நோக்கில் மண்மூட்டைகள் அடுக்கி மதில் உடைந்து விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டமொன்று ஒரு வாரகாலமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்தும் இன்று (07) மாலை குறித்த பிரதேசத்தில் மண்மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்றது.

மேற்படி வேலைத்திட்டத்தில் திணைக்கள அதிகாரிகள், காரைதீவு பிரதேச செயலக (Divisional Secretariat Karaitivu) அதிகாரிகள், பிரதேச சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசலின் போசகர் பௌஸர் ஹாஜி அடங்களாக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தொண்டர் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தோடு பல அரசியல் பிரமுகர்களும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் முன்வைத்து வந்த போதிலும் நத்தை வேகத்திலையே நடவடிக்கைகள் அமைந்திருப்பது கவலையளிக்கிறது. இருந்தாலும் கடலரிப்பு உச்சநிலையில் இருப்பதனால் ஜனாஸாக்கள் தோண்டப்படுகின்றது. தொடர்ந்தும் இவ்வாறு ஜனாஸாக்கள், மனித எச்சங்கள், வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதனால் அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என மாளிகைக்காடு பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply