ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் ’20’ இற்கு ஆதரவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகியனவே ’20’ இற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது கட்சிகளின் ஆதரவை அரச உயர் மட்டத்திற்கு குறித்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.
எனினும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 20 தொடர்பில் தமது நிலைப்பாட்டை இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply