பொடி லெசிக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான ”பொடி லெசி” என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டோருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

காலி பிரதம நீதவான் ஹர்ஷன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Be the first to comment

Leave a Reply