அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு… தொடர்ந்து 2 போட்டிகளில் இடம்பெறாத குல்தீப்

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் அணியின் முதல் 3 போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான கடந்த இரு போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை. குல்தீப்பிற்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை அணியின் கோச் வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் அந்த அணியின் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். முதல் போட்டியில் 4 ஓவர்களையும் போட்டு விக்கெட்டுகள் எடுக்காமல் 39 ரன்களை கொடுத்தார். இரண்டாவது போட்டியில் 2 ஓவர்களை மட்டுமே போட்டு 15 ரன்களை கொடுத்தார்.

2 போட்டிகளில் இடம்பெறவில்லை இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 3வது போட்டியில் 3 ஓவர்களை போட்டு ஒரு விக்கெட்டையும் கொடுத்திருந்தார். இந்த போட்டியில் 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் அணியில் இடம்பெறவில்லை.

காரணம் சொன்ன கோச் அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி அணியில் இடம்பெற்று சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்த போட்டிகளிலும் இவரே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து தற்போது அணியின் பௌலிங் கோச் கைல் மில்ஸ் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேகேஆர் அணியின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக அளவில் சிறந்த ஸ்பின்னர் குல்தீப் யாதவ் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். அணியில் மற்ற வீரர்களை பயன்படுத்தும் நோக்கத்திலும் மிகப்பெரிய மைதானங்களை கருத்தில் கொண்டும் குல்தீப் யாதவ் தற்போது போட்டிகளில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அணியில்தான் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply