கொரோனா வைரஸ் – மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  1. கொரோனா வைரஸ் என்றால் என்ன?
    இது ஒரு நுண் உயிரி, உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கொரோனா வைரஸ் பாதித்தால் சாதாரண சளி முதல் சார்ஸ், மெர்ஸ், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பு ஏற்படும்.
  2. கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்
    இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல் ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும். ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Severe Acute Respiratory Syndrome) எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
  3. கொரோனா வைரஸ் பரவும் முறை
    பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் பரவும், பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதின் மூலமும் பரவும் தன்மை கொண்டது. ஏனவே, மருத்துவமனையிலும் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

4.கொரோனா வைரஸ் ; தற்காத்துக் கொள்வது எப்படி?
ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை. கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம் மற்றும் உணவுச் சுத்தம் (personal and food hygiene) கறாராகப் பேணப்பட வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது. எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled) முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம். 

5.கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்!
சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை நேற்று முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிடலாம் என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply