தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட வீதியின் ஓரத்தில் இன்று (9) காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக லிந்துலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுத்தையின் சடலம் நுவரெலியா வனஜீவராசிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply