கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்த்தில் மேலும் 3 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன!

ஊழியர்களிற்கு கொரோனா தொற்று பரவியிலிருக்கலாமென்ற சந்தேகத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்த்தில் உள்ள மூன்று ஆடை தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதன் ஊழியர்கள் தமது விடுதிகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுகள் உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் நிர்வாகத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆடைத் தொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை விடுதிகளுக்குச் செல்லுமாறு கூறப்பட்டிருந்தாலும், இதுவரை முறையான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என தொழிலாளர்களின் உரிமைகளை ஆராயும் அமைப்பொன்றின் சார்பில் பேசிய ஆஷிலா தண்டெனியா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் ஊழியர்களுடன் தங்குமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ள பிற நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்றுள்ளதாகவும், இது ஆபத்தான சூழ்நிலை என்றும் குற்றம் சாட்டினார்.

Be the first to comment

Leave a Reply