இலங்கையின் கொரோனா நிலவரத்தின் உண்மையை உடைத்த மருத்துவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ராஜித சீற்றம்

இலங்கையின் கொரோனா நிலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதாலேயே பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான தகுதி இருக்கவில்லை என்பதுதான் சிறிய பிரச்சினை.

Be the first to comment

Leave a Reply